சூளகிரி அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-10-10 19:30 GMT

சூளகிரி:

சூளகிரி தாலுகா காளிங்காவரம் அருகே உள்ள கொடிதிம்மனஅள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 33). தொழிலாளி. இவரும் பெத்த சிகரலப்பள்ளி அருகே திராடியை சேர்ந்த சிவராஜ் (24) என்பவரும் ஒட்டையனூர்- காளிங்காவரம் சாலையில் சின்ன கொத்தூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் 2 பேர் மீதும் மோதினார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவராஜ் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்