மத்தூர் அருகேலாரி மோதி முதியவர் சாவு
மத்தூர் அருகே லாரி மோதி முதியவர் இறந்தார்.;
மத்தூர்
மத்தூர் அருகில் உள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது60). கூழ் வியாபாரி. இவர் நேற்று மொபட்டில் விற்பனைக்காக கூழ் எடுத்து சென்றார் அப்போது மத்தூர்- ஊத்தங்கரை சாலையில் சோனாரஅள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தணிகாசலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்