பாலக்கோடு அருகேவிபத்தில் வாலிபர் சாவு

Update: 2023-09-20 19:30 GMT

பாலக்கோடு:

காரிமங்கலம் அருகே கெண்டிகானஅள்ளியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 21), ஸ்ரீநாத் (18). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். பாலக்கோடு சித்திரைபட்டி அரிசி குடோன் அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சுரேஷ், ஸ்ரீநாத் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீநாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்