ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் ஆகாஷ் (வயது 24). இவர் மோட்டார் சைக்கிளில் அங்குள்ள அரசு பள்ளி அருகில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், ஆகாஷ் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் ஆகாஷ் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.