அரூர்:
தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டையை சேர்ந்தவர் ஏசுமேரி (வயது 46). தொழிலாளி. இவருக்கு கால் வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற உறவினரான அந்தோணிராஜ் (42) என்பவருடன் மொபட்டில் கோபிநாதம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். சாலையோரத்தில் இருந்த மரத்தின் கீழே 2 பேரும் ஓய்வுக்காக நின்றனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் 2 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஏசு மேரி பரிதாபமாக உயிரிழந்தார். அந்தோணி ராஜ் படுகாயம் அடைந்தார். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.