மத்தூர்
ஊத்தங்கரை தாலுகா வெங்கடதம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 62). இவர் தனியார் பள்ளியில் பஸ் கிளீனராக வேலை செய்து வந்தார். கடந்த 27-ந் தேதி இவர் ஸ்கூட்டரில் மூக்காகவுண்டனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.