தொப்பூர் கணவாயில்தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

Update: 2023-07-18 19:30 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தடுப்பு சுவரில் மோதியது

ஈரோடு மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் நவீன்குமார் (வயது 22). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் ேநற்று முன்தினம் மோட்டார் சைக்கிள் மூலம் ஓசூருக்கு வந்து கொண்டு இருந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நவீன்குமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து நவீன்குமாரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்