குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
ஏர்வாடி அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.;
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே கோதைச்சேரியில் வேட்டைக்காரன்குளம் உள்ளது. களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு உட்பட்ட இந்த குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இதனை வடுகச்சிமதிலை சேர்ந்த முத்துப்பாண்டியன் (வயது 55) என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன்கள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் அந்த குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன. மீன்கள் இறப்பிற்கு என்ன காரணம்? என்பது தெரியவில்லை. குளத்தில் யாரேனும் விஷம் அல்லது வேறு ஏதேனும் ரசாயன பொருட்கள் கலந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.