கும்மிடிப்பூண்டி அருகே மாயமான வாலிபர் குளத்தில் பிணமாக மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே மாயமான வாலிபரின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.;

Update: 2023-04-18 09:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள குமரநாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து லட்சுமணன் திடீரென மாயமானார்.

அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லாத நிலையில் உறவினர்களின் புகாரின் அடிப்படையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான லட்சுமணனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், அதே பகுதியையொட்டிய மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் நேற்று காலை அவர் பிணமாக மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் லட்சுமணனின் உடலை குளத்தில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்