திருச்சி- பெங்களூரு இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் திருச்சி- பெங்களூரு இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-11-11 17:03 GMT

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் திருச்சி- பெங்களூரு இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் கோட்ட ரெயில்வே பயனீட்டாளர் ஆலோசனை கூட்டம் நேற்று ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் தலைமை தாங்கினார். கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். முதன்மை கோட்ட வணிக மேலாளர் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் வண்டி எண்.12635-12636 வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கோரிக்கை தலைமையகத்திற்கு ஏற்கனவே அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில்

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் சேவையை அறிமுகப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் கரூர், ஈரோடு, திருச்சி வழியாக பெங்களூருக்கு புதிய பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் விரையில் இயக்குவதற்கான கோரிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டில் திருச்சி ரெயில்வே கோட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள், உள்கட்டமைப்பு திட்டங்கள், பயணிகள் பாதுகாப்பு போன்ற ரெயில்வே தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. ரெயில் பயணிகளின் வசதிகள், ரெயில் சேவைகள், பாதுகாப்பு மற்றும் பல்வேறு ரெயில்வே தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்