மாற்றுத்திறனாளிகள் தின விழா

அம்பை வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.;

Update: 2022-11-29 20:33 GMT

அம்பை:

அம்பாசமுத்திரம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறன் மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி மார்கிரேட் தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நேஷனல் இன்னர் வீல் கிளப் தலைவி டாக்டர் பத்ரிசியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அம்பை இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆபேல் சேத், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஜெயக்குமார், மாதாங்கனி, திருவருடசெல்வி ஆகியோர் பேசினர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பிரியதர்சினி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்