கோவையில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

கோவையில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

Update: 2022-12-04 18:45 GMT

கோவை

கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரி 51 சக்தி பீட கோவில் உள்ளது. இங்கு உலக சமாதான பெருவிழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

நான் இந்த கோவிலுக்கு பலமுறை வருவதாக காமாட்சிபுரி ஆதீனத்தி டம் கூறினேன். ஆனால் என்னால் வர முடியவில்லை. இன்று (நேற்று) வந்ததை நான் பாக்கியமாக நினைக்கிறேன். உலக சமாதானத்திற்காக காமாட்சிபுரி ஆதீனம் தெய்வீக பணியை செய்து வருகிறார். சமத்துவம், சமாதானம் என்று சாதி, மதம் கடந்து மக்கள் நலனுக்காக அவர் வாழ்ந்து வருகிறார். இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் காமாட்சிபுரி ஆதீனம் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலக சமாதான விருது வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்