சீர்காழி சட்டைநாதர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.;

Update:2022-07-29 17:23 IST

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் வந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக சிவன் சன்னதி, திருநிலை நாயகி, முத்துச்சட்டை நாதர், சட்டை நாதர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அவருடன் மாவட்ட கலெக்டர் லலிதா, திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்