தர்கா கந்தூரி விழா

கீழ்வேளூர் அருகே தர்கா கந்தூரி விழா நடைபெற்றது.;

Update: 2023-06-24 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ஆழியூர் மெயின் ரோட்டில் உள்ள செய்யது இனாயத்துல்லா வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தர்காவில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு வரப்பட்டது. பின்னர் தர்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் பாத்திஹா ஓதி கொடி ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தேதி இரவு நடக்கிறது. 6-ந் தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் ஆழியூர் பள்ளிவாசல் நிர்வாகிகள், விழா கமிட்டியினர், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்