சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-01 17:43 GMT

பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது அதிகரித்து வருகின்றது. வாடகை குறைவு, அதிக எண்ணிக்கையில் பயணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது அதிகரித்து வருகின்றது. இந்த சரக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பயணம் செய்பவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட எந்த உதவியும் கிடைக்காது என்பதை யாரும் உணர்வதில்லை. இதனை போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்டுகொள்ளாததால் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது தொடர் கதையாக உள்ளது. இதனால் அரசுக்கு வரி செலுத்தி வாடகைக்கு இயக்கும் வேன் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த சரக்கு வாகனங்களில் திருமணம், காதணி விழா, இறப்பு, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் பயணம் ஆபத்தை உணராமல் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பொதுமக்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் மீதும், அதன் டிரைவர்கள் மீதும், பயணம் செய்பவர்கள் மீதும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்