ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்;

Update: 2022-06-09 14:47 GMT

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி ஆறுமுச்சந்தி தோப்புத்துறையில் மின்கம்பம் ஒன்று மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பம் வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். ஆகவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், வேதாரண்யம்.


Tags:    

மேலும் செய்திகள்