சாலையில் சேதமடைந்த தடுப்பு வேலிகளால் விபத்து அபாயம்

ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் சிற்றார் 2 நீர்த்தேக்க பகுதியில் தடுப்பு வேலிகள் ேசதமடைந்து உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-03-14 19:02 GMT

அருமனை, 

ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் சிற்றார் 2 நீர்த்தேக்க பகுதியில் தடுப்பு வேலிகள் ேசதமடைந்து உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிற்றார் அணை

அருமனை அருகே உள்ள களியலை அடுத்து சிற்றார் 2 அணை உள்ளது. இதன் நீர்தேக்க பகுதி வழியாக ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

இந்த சாலை வழியாக தமிழக மற்றும் கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். குமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் கோட்டை, திற்பரப்பு அருவி போன்ற இடங்களை பார்த்து விட்டு கேரளாவுக்கு செல்வதற்கு எளிமையான பாதையாக இந்த சாலை உள்ளது.

தடுப்பு வேலிகள்

இந்த சாலையில் வரும் வாகனங்கள் நீர் தேக்கத்துக்குள் விழுந்து விபத்து ஏற்படாத வகையில் சாலையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த தடுப்பு வேலிகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் குறுகிய காலத்தில் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. தற்போது இந்த வேலிகள் நீர்பிடிப்பு பகுதிக்குள் கவிழ்ந்தும் சாலையில் ஓரத்தில் கவிழ்ந்து கிடக்கின்றது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே தடுப்பு வேலிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்