துர்க்கை அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

காட்டுமன்னார்கோவில் துர்க்கை அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது.

Update: 2023-08-06 18:44 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவிலில் உள்ள உடையார் குடியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் ஆதிபராசக்தி, மீனாட்சி, மகாலட்சுமி, சயனம், காமாட்சி, ராஜராஜேஸ்வரி, துர்க்கை, வீரசக்தி போன்ற வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான துர்க்கை அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சக்தி கரகத்துடன் பக்தர்கள் பால்குடம் சுமந்தும், வாயில் அலகு குத்தி, கையில் கத்தியை பிடித்துக்கொண்டும், அபிஷேக பொருட்களை உடலில் சுமந்தபடியும் ஊர்வலமாக சென்று முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் செங்குந்த பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்