சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும்

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும்

Update: 2023-04-17 18:45 GMT

வலங்கைமான் அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்சி பொருளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருவாரூர் மாவட்டம் மூலால்வாஞ்சேரி ஊராட்சியில் சாலபோகம் கிராமம் உள்ளது. இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி பராமரிப்பின்றி காட்சி பொருளாக காணப்பட்டது. தற்போது இந்த தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் அந்த தொட்டியை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் அப்பகுதி பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவை மற்றும் பயன்பாட்டிற்காக சேதமடைந்த தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டி கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

புதிதாக கட்டித்தர வேண்டும்

இதனை ஏற்று அதே பகுதியில் ரேஷன் கடை அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனாலும் இந்த தொட்டியும் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் தொழிலாளிகள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமலும் பராமரிப்பு இல்லாமலும் காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்