ஸ்கேன் அறிக்கை தாமதமாவதால் நோயாளிகளுக்கு பாதிப்பு

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் அறிக்கை தாமதமாவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-28 19:02 GMT


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் அறிக்கை தாமதமாவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சி.டி. ஸ்கேன்

இதுகுறித்து தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத்ராஜா மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் எடுப்பவர்களுக்கு நெகட்டிவ் படம் காலதாமதமாக கொடுக்கப்படுவதால் அன்றைய தினம் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு முடிந்து விடுகிறது. மேலும் அதற்கான அறிக்கையும் மறுநாள் மதியம் 12 மணிக்கு தரப்படுவதால் அதற்குள்ளும் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு முடிவடைந்து விடுவதால் மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற 3 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

நடவடிக்கை

இதனால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் எக்ஸ்ரே எடுக்க பணம் கட்டுவதற்கு காலை 10 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே ஸ்கேன் மையத்தில் தாமதம் இல்லாமல் நெகட்டிவ் படம் மட்டும் அறிக்கை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்