நிலக்கடலை உலர்த்தும் பணிகள் பாதிப்பு

நிலக்கடலை உலர்த்தும் பணிகள் பாதிப்பு

Update: 2023-05-04 20:15 GMT

அம்மாப்பேட்டை, ராராமுத்திரகோட்டை, நல்லவன்னியன்குடிகாடு, பூண்டி, அருந்தவபுரம் உள்பட பல பகுதிகளில் நிலக்கடலை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் நிலக்கடலை அறுவடை செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடை செய்த நிலக்கடலையை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். நிலக்கடலையை உலர வைக்க பலகிலோ மீட்டர் தூரம் எடுத்துச்சென்று நெடுஞ்சாலைகளில் உலர வைக்க வேண்டி உள்ளதாக கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அறுவடை செய்த நிலக்கடலையை உலர வைக்க உலர்கலம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்