மின்னல் தாக்கி பல்பொருள் அங்காடி சேதம்

மின்னல் தாக்கி பல்பொருள் அங்காடி சேதம் அடைந்தன.;

Update: 2022-10-21 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகாவில் ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொண்டியில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் திடீரென மின்னல் தாக்கியதில் கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஊழியர்கள் கடையை சீக்கிரமாக பூட்டி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்