நிரம்பி வழியும் சண்முகா நதி அணை; விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை எதிரொலியாக நிரம்பி வழியும் சண்முகா நதி அணை நிரம்பியது.;

Update: 2022-10-18 17:07 GMT

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் 52.55 அடி உயரமுள்ள சண்முகா நதி அணை உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை, மேல்மணலாறு, கீழ்மணலாறு, இரவங்களாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்தநிலையில் தொடர் மழை காரணமாக சண்முகா நதி அணை நேற்று தனது முழு கொள்ளளவான 52.55 அடியை எட்டி நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது.

இந்த அணையின் மூலம் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அப்பிபட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 25 கண்மாய்கள் நிரம்பும். தற்போது அணை நிரம்பியுள்ளதால் இந்த கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ேமலும் அணை நிரம்பியதால் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்