கறவைமாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

திருவண்ணாமலையில் கறவைமாடு வளர்ப்பு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடக்கிறது

Update: 2023-04-25 11:10 GMT

திருவண்ணாமலை வட ஆண்டாப்பட்டு புறவழிச்சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவைமாடு வளர்ச்சி பயிற்சி முகாம் வருகிற 27-ந் தேதி மற்றும் 28-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.

பயிற்சி முகாமில் கல்நது கொள்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் ஆதார் எண் கொண்டு வர வேண்டும்.

இந்த தகவலை திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தலைவர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்