சிறுமியை கடத்திய பால் வியாபாரி கைது

வடமதுரை அருகே சிறுமியை கடத்திய பால் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-21 17:16 GMT

வடமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரின் 11 வயது மகள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி திடீரென்று மாயமானாள். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவள் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை காம்பார்பட்டியை சேர்ந்த பால் வியாபாரியான குணசேகரன் (42) என்பவர் கோவைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவைக்கு சென்று, குணசேகரனை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்