தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய பதிவுகள்.

Update: 2022-07-08 17:35 GMT


 மின்கம்பம் சேதம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு வி.க. நகர் பாண்டியன் வீதி 1-ல் ஓம் சக்தி கோவில் அருகில் கால்வாயையொட்டி சிமெண்டு கம்பத்தால் ஆன மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்தக் கம்பம் சேதம் அடைந்து கம்பிகள் ெவயியே தெரிகிறது. கால்வாய்க்கு அருகில் இருப்பதால் எந்த நேரத்திலும் ஆபத்து எற்பட வாய்ப்புள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

நச்சுப்புைகயால் மூச்சுத்திணறல்

குடியாத்தம் 14-வது வார்டு அருணாச்சல நகர் பகுதியில் குப்ைபகளை கொட்டி தினமும் தீ வைத்து எரித்து வருகின்றனர். அதில் இருந்து ெவளியேறும் நச்சுப்புைக அக்கம் பக்கம் வசிப்போருக்கும், அந்த வழியாகச் ெசல்லும் வாகன ஓட்டிகளுக்கும் மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சந்தோஷ், குடியாத்தம்.

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

கலவை அரசு மருத்துவமனை அகரம் சாலையில் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை முன்பு உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. அது, 15 நாட்களாக எரியவில்லை. இது குறித்து அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால் நோயாளிகள், பார்வையாளர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின்விளக்கை எரியவிட வேண்டும்.

-அய்யப்பன், கலவை.


போக்குவரத்துக்கு இடையூறு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தையொட்டி பஸ் நிலையம் உள்ளது. அந்தப் பஸ் நிலையம் எதிரே காமராஜர் தெரு உள்ளது. அந்தத் தெரு அருகில் எல்.ஐ.சி. அலுவலகம், கோவில், ஏ.டி.எம்.மையம் ஆகியவைகள் உள்ளன. அந்தத் தெருவில் மோட்டார்சைக்கிள்கள் ஆக்கிரமிப்புகள், குப்பைக்கொட்டுதல் போன்றவற்றால் நடவடிக்கையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து இடையூறை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளமாறன், கீழ்பென்னாத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்