தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய பதிவுகள்;

Update: 2022-06-19 16:31 GMT


கால்வாய் வசதி தேவை

கலசபாக்கம் சத்தியமூர்த்தி நகரில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு மழை பெய்யும்போதெல்லாம் நகரில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. அந்த வழியாக நடந்ேதா, வாகனங்களிலோ செல்ல சிரமமாக உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீர் வடிய போதிய கால்வாய் வசதி இல்லை. தெருவில் முறையான சாலை வசதியும் இல்லை. நகரில் தேங்கும் மழைநீர் வடிய ேவண்டுமென்றால் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-ஏழுமலை, கலசபாக்கம்.

சுற்றுச்சுவர் கட்ட ேவண்டும்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சதாகுப்பம் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

-விஸ்வநாதன், சதாகுப்பம்.

போளூர் வீரப்பன் தெருவில் நூலகம் உள்ளது. அங்கு இரவில் குடிமகன்கள் மதுபானம் குடித்து விட்டு காலி பாட்டில்களை நூலக வாசலில் போட்டு உடைத்துவிட்டு செல்கிறார்கள். எனவே நூலகத்துக்கு சுற்றுச்சுவர் கட்டி, நுழைவு வாயிலுக்கு இரும்பு ேகட் அமைக்க வேண்டும்.

-ஆட்டோ க.முத்து, சமூக ஆர்வலர் போளூர்.

 கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

திருவண்ணாமலை மாவட்டம் வேளையாம்பாக்கத்தில் கிராம சேவை மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால், அதை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் கட்டிடம் சேதம் அடைந்து வருகிறது. அப்பகுதியில் வசிப்போர் தங்களின் கால்நடைகளை அங்கு கட்டி வருகின்றனர். அதை மக்கள் பயன்பாட்டுக்கு ெகாண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவக்குமார், வேளையாம்பாக்கம்.

 இருக்கைகள் சேதம்

போளூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணியர் நிழற்குடையில் பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் உள்ளன. அதில் பெரும்பாலான இருக்கைகள் உடைந்து காணப்படுகின்றன. இதனால் பயணிகள் அமர இடமின்றி அவதிப்படுகிறார்கள். பயணியர் நிழற்குடையில் உள்ள இருக்கைகளை சீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக வாங்கி போட வேண்டும்.

-லிங்கம், போளூர்.

மின்கம்பம் சேதம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர அரசு மருத்துவமனையின் அருகில் ஒரு மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. கீழிருந்து மேல் பகுதி வரை சேதம் அடைந்துள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, புதிய மின்கம்பம் அமைக்க ேவண்டும்.

-த.வெங்கடேசன், பேரணாம்பட்டு.

மோசமாக சாலையால் மக்கள் அவதி

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையொட்டி உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் ெஜ.பி.சாலை மிக மோசமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒவ்வொரு வார்டாக பணிகளை மேற்கொள்ளாமல் ஒட்டு மொத்த வேலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்துச் சாலைகளையும் ஒரே நேரத்தில் பெயர்த்துப்போட்டு பணிகளை மெத்தன போக்கில் செய்து வருகிறார்கள். இதனால் வயது முதிர்ந்தவர்கள், சிறுவர், சிறுமிகள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்தச் சாலையை உடனே சீரமைத்துத் தர ேவண்டும்.

-பார்த்திபன், வேலூர்.

ஏரியில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

ராணிப்பேட்டை மாவட்டம் பழையனூர் கிராம ஏரியில் கோழிக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டி மாசுப்படுத்துகிறார்கள். கோழிக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவோரை அடையாளம் கண்டு ஊராட்சி நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-ராஜா, பழையனூர்.

பஸ் நிலையத்தில் இதர வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

ராணிப்ேபட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையத்துக்குள் தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், வேன்கள் நுழைந்து வெளியே செல்கின்றன. இதனால் பயணிகள், பஸ் டிரைவர்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும் பயணிகள் சிலர் அவசரமாக பஸ்சில் ஏற ஓடும்போது, குறுக்கே இருசக்கர வாகனத்தில் வருவோர் பயணி மீது மோதி விடுகிறார்கள். எனவே ஆற்காடு பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்.

-பா.ஜான், ஆற்காடு.

'தினத்தந்தி'க்கு நன்றி

கே.வி.குப்பத்தை அடுத்த மகாதேவமலை நுழைவு வாயில் எதிரில் தேசிய நெடுஞ்சாலையொட்டி வெட்டிய நிலையில் ஆபத்தான புளியமரம் இருந்தது. அந்த மரத்தை அகற்ற வேண்டும் என 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக புளிய மரம் அகற்றப்பட்டது. செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு ஊர் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

-மாதவன், ேக.வி.குப்பம்.

Tags:    

மேலும் செய்திகள்