தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.
தினத்தந்திக்கு நன்றி
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தபால் அலுவலக தெரு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனையொட்டி சாலையை இணைக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டதால் சாலையில் கழிவுநீர் ஓடியது. இதுகுறித்து தினத்தந்தியில் வெளியிடப்பட்ட செய்தி எதிரொலியாக கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டது. தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
-கண்ணன், சோளிங்கர்.
ஆபத்தான பள்ளம்
வேலூர் சைதாப்பேட்டை மெயின் பஜாரில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையின் நடுவே ஆங்காங்கே பாதாள சாக்கடைக்கான சிமெண்டு சிலாப்புகளில் மேன்ஹோல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பி.எம்.செட்டி தெரு அருகே ஒரு சிமெண்டு சிலாப்பு உடைந்து மேன்ஹோல் உள்ளே விழுந்து விட்டது. அந்த வழியாகச் செல்பவர்கள் தடுமாறி பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. இரவில் மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அந்த ஆபத்தான பள்ளத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலாஜி, சைதாப்பேட்டை.
ஆதிதிராவிடர் விடுதி சீர் செய்யப்படுமா?
அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி கடந்த சில ஆண்டுகளாக மூடி இருப்பதால் புதர் மண்டி காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் இரவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பயன்பாட்டுக்கு இல்லாத இந்தக் கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் அல்லது விடுதியை சீர் செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முகமதுஷானவாஸ், அரக்கோணம்.
பழுதான மின்கம்பம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த கரடிகுப்பம் கிராமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று வாரச்சந்தை நடந்து வருகிறது. அந்த வாரச்சந்தை பகுதியில் ஒரு மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. அங்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மின் வாரியத்துறை அதிகாரிகள் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும.
-மனோகரன், கரடிகுப்பம்.
சோளிங்கரை அடுத்த எம்.பி.குப்பம் கிராமத்தில் உள்ள பெரிய தெரு பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. மின்கம்பத்தில் அடிப்பகுதி முழுவதுமாக உடைந்து பக்கவாட்டில் உள்ள கம்பிகள் மட்டும் தற்போது கம்பத்தை தாங்கி உள்ளது. இந்தக் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படலாம். மின்வாரியத்துறை அதிகாரிகள் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கம்பத்தை அமைக்க வேண்டும்.
-பரசுராமன், சோளிங்கர்.
சிமெண்டு சிலாப்பை சரி செய்ய வேண்டும்
காட்பாடி கழிஞ்சூர் மெயின் ரோடு 6-வது குறுக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதன் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் சிமெண்டு சிலாப் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
சாலையில் தேங்கும் நீரில் கொசு உற்பதினத்தந்தி புகார் பெட்டி, பொதுக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.த்தி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவில் சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைப் பெய்யும் நேரத்தில் குழியில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. அந்தத் தெருவில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும்.
-அப்துல் சமது, அப்துல்லாபுரம்.