'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-18 21:13 GMT

குறுகலான ரோடு

ஈரோடு சோலார் செந்தூர் கார்டனுக்கு வரும் சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. உடனே ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், செந்தூர் கார்டன்.

வீணாகும் குடிநீர்

ஈரோடு பி.பி.அக்ரகாரத்தில் சத்தி ரோடு பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். உடனே குழாய் கசிவை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பி.பி.அக்ரகாரம்.

நாய்கள் தொல்லை

கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் நாய் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக ரோடு, தெருக்களில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே நகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேஷ், கோபிசெட்டிபாளையம்.

விபத்து ஏற்படும் அபாயம்

ஈரோடு சோலாரில் இருந்து பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தம் செல்லும் முக்கிய ரோட்டில் பல இடங்களில் நடுரோட்டிலேயே பாதாள சாக்கடை மூடி உள்ள இடம் பள்ளமாக உள்ளது. அருகே சென்றால்தான் அவைகள் தெரிகின்றன. விபத்து ஏற்படுவதற்குள் அதிகாரிகள் இதை சரிசெய்யவேண்டும்.

பொதுமக்கள், சோலார்.

ரோட்டில் பள்ளம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் ரோட்டில் இருந்து முனிசிபல் காலனி செல்லும் ரோட்டின் வளைவில் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முனிசிபல் காலனி, ஈரோடு.

பாராட்டு

அந்தியூாில் இருந்து கொங்காடை மலைக்கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பர்கூர் மணியாச்சிபள்ளத்தில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் விபத்தில் சிக்கியது. இதனால் அப்பகுதிக்கு பஸ் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மலைக்கிராம மக்கள் நலன் கருதி மீண்டும் அந்த பஸ்சை இயக்க வேண்டும் என்று தினத்தந்தி புகாா் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து அந்தியூா்-கொங்காடை மலைக்கிராமத்துக்கு அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு நன்றியை தொிவித்துக்கொள்கிறோம்.

முருகன், பா்கூா் கொங்காடை.

நன்றி 

ஈரோடு திருநகர் காலனியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே குப்பை குவிந்து கிடந்தது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை அகற்றப்பட்டு்ள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆ.லோகநாதன், ஈரோடு.

கோரிக்கை ஏற்பு

பவானி அருகே வைரமங்கலம் கிராமம் குட்டிபாளையம் இந்திரா காலனியில் உள்ள பொதுகிணறு திறந்த நிலையில் கிடக்கிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த கிணற்றுக்கு கம்பி வலை அமைக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு்க்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குட்டிபாளையம்.

-----------------

Tags:    

மேலும் செய்திகள்