'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்'

தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-06-05 23:43 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் சாக்கடை வடிகாலில் கழிவுநீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே பாதியில் நின்று போன சாக்கடை வடிகால் பணியை முடிப்பதுடன், சாக்கடை கழிவுநீர் தங்கு தடையின்றி செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், புதுப்பாளையம்.

சுகாதாரக்கேடு 

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் பிரிவு பகுதி வருகிறது. அந்த பிரிவு பகுதியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் 6 இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், அந்த பகுதியில் சுகாதாரக்கேடும் எற்பட்டு உள்ளது. மேலும் அந்த ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் கண்கள் மீது குப்பையின் தூசுகள் பறந்துவந்து விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குப்பைகளை அகற்றி, அந்த பகுதியை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

பழுதடைந்த ரோடு

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் வருகிறது. அந்த பகுதியில் உள்ள ரோட்டில் குழி தோண்டப்பட்டு உள்ளது. பின்னர் அந்த குழி மண் போட்டு மூடப்பட்டது. ஆனால் அந்த குழி சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வாகனங்கள் அந்த ரோட்டில் செல்லும்போது விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே அதிகாரிகள் குழியை சரியாக மூடி சமதளப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

குவிந்து கிடக்கும் குப்பை 

பெருந்துறையில் ஆசிரியர் கூட்டுறவு நகர் உள்ளது. இங்குள்ள பவானி ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தங்களுடைய மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெருந்துறை.

ஆபத்தான குழி 

ஈரோடு சத்தி ரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகில் நடுரோட்டில் ஆபத்தான குழி உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. இதில் பலர் விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குழியை சரிசெய்யவேண்டும்.

நாகராஜ், ஈரோடு.

-----

Tags:    

மேலும் செய்திகள்