'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.;

Update: 2022-10-02 19:04 GMT


சாலை சீரமைப்பு அவசியம்


பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் இருந்து காவலப்பட்டிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள பாலத்தில் இருந்து சுமார் அரை அடி தாழ்வாக சாலை அமைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே பாலம் அளவுக்கு சாலையை சீரமைக்க வேண்டும்.-முருகன், நெய்க்காரப்பட்டி.


சாலை அருகே டிரான்ஸ்பார்மர்


திண்டுக்கல் அரண்மனை குளம் அருகே இருக்கும் மதுரை சாலையை ஒட்டி மின்சார டிரான்ஸ்பார்மர் அமைந்து இருக்கிறது. எதிர் எதிரே வரும் இரு வாகனங்கள் விலகி செல்லும் போது டிரான்ஸ்பார்மரை ஒட்டி வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது. இது விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே சாலையை ஒட்டி இருக்கும் டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும்.-கணேசன், திண்டுக்கல்.


சாக்கடை கால்வாயில் குப்பைகள்


தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அன்னஞ்சியில் ஒன்னம்மாள் தொட்டராயர் கோவிலுக்கு செல்லும் வழியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாயில் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். -வேல், அன்னஞ்சி.


பஸ்நிறுத்தத்தில் கழிவுநீர்


திண்டுக்கல்-பழனி புறவழிச்சாலையில் மேம்பாலம் அருகே இருக்கும் பஸ்நிறுத்தத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சாலையில் நிற்கும் நிலை உள்ளது. இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பஸ்நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்காமல் தடுக்க வேண்டும். ராஜே ஷ்கண்ணன், திண்டுக்கல்.


மேல்நிலை குடிநீர் தொட்டி


குமணன்தொழு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் விளையாடும் பகுதியாக இருப்பதால் குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும்.-பொதுமக்கள், குமணன்தொழு.


சாக்கடை பாலம் சேதம்


திண்டுக்கல் மங்களாபுரத்தில் ஆதிசிவன் கோவில் முன்புள்ள சாக்கடை பாலம் சேதம் அடைந்துவிட்டது. பாலத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. இதனால் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இரவில் அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். புதிதாக சாக்கடை பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜா, திண்டுக்கல்.


தேங்கி நிற்கும் கழிவுநீர்


உத்தமபாளையம் அருகே சின்ன ஒவுலாபுரத்தில் பட்டாளம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் முழுமையாக கட்டப்படவில்லை. இதனால் கால்வாய் இல்லாத இடத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை முழுமையாக கட்டித்தர வேண்டும். -சங்கீதாகதிர், சின்ன ஒவுலாபுரம்.


பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு


சாணார்பட்டியை அடுத்த கொசவப்பட்டி பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. இதனால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் செல்போனில் பேச முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சேவை பாதிப்பை சரிசெய்ய வேண்டும். -தாமஸ்அந்தோணி, கொசவப்பட்டி.


புதர் மண்டிய சாலை


கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் முட்புதர்கள் மண்டி காணப்படுகின்றன. வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் இருக்கும் புதர்களை அகற்ற வேண்டும். -பொதுமக்கள், லோயர்கேம்ப்.


புதிய ரேஷன்கடை அவசியம்


கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெரு, கே.கே.பட்டிசாலை, மாலையம்மாள்புரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உத்தமபுரம் ரேஷன்கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்த ரேஷன்கடையில் சுமார் 2 ஆயிரம் ரேஷன்கார்டுகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மாலையம்மாள்புரத்தில் புதிதாக ஒரு ரேஷன்கடை திறக்க வேண்டும். -செல்வி, கம்பம்.


உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.




Tags:    

மேலும் செய்திகள்