தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்கள் விவரம்.;

Update: 2022-06-05 14:37 GMT

சாலையில் தேங்கும் மழைநீர்

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மங்காடு முதல் யூனியன் அலுவலகம் வரை செல்லும் சாலையில் மழைக்காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, அந்த பகுதியில் மழைநீர் ஓடை அமைத்து சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுகுமாரன் லால், முன்சிறை.

கழிவுகளை அகற்ற வேண்டும்

அஞ்சுகிராமம் பேரூராட்சி உள்பட்ட பகவதிபுரம் குளத்தில் இருந்து பிராந்தனேரி குளம் வரை ஆற்றில் தூர் வாரப்பட்டது. தூர்வாரிய கழிவுகளை சாலையோரம் ஆங்காங்கே குவியல் குவியலாக வைத்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, சலைேயாரம் குவித்து வைத்துள்ள கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சரவண சுதாகர், சிவராமபுரம்.

சாலையோரம் பள்ளம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மண்டைக்காடு பகுதியில் சில இடங்களில் சாலையோரம் சேதமடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருகிறவர்கள் கொஞ்சம் தவறினால் கூட விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே சாலையோர பள்ளங்களை சீரமைத்து விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பகருதீன், குளச்சல். 

தெருவிளக்குகள் வேண்டும்

ஈத்தங்காட்டில் இருந்து ஆஸ்ரமம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த சாலையில் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் சாலை மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையில் ெதருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.ராம்தாஸ், சந்தையடி.

பஸ் வசதி வேண்டும்

குளச்சலில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் கன்னியாகுமரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லை. எனவே, குளச்சலில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடி பஸ் வசதி வேண்டும். இதுபோல், குளச்சலில் இருந்து சென்னைக்கு பஸ் வசதி வேண்டும். சபரிமலை சீசன் காலங்களில் திங்கள்நகரில் இருந்து இயக்கப்படும் வெளியூர் பஸ்கள் அனைத்தும் குளச்சலில் இருந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாகிர், குளச்சல்.

சுகாதார சீர்கேடு

கல்குளம் தாலுகாவில் திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் முன்பக்கம் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சுகாதார சீர்கேட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜகோபால், திருவிதாங்கோடு.

Tags:    

மேலும் செய்திகள்