தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-11-20 18:30 GMT

அரசு பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, திருக்களம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். எனவே அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமசந்திரன், திருக்களம்பூர்.

ஊர் பெயர் பலகையில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் 

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மேலாத்தூர் பகுதியில் ஊர் பெயர் பலகையை மறைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பிற பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஊர் பெயர் தெரியாமல் கடும் அவதி அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மேலாத்தூர்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமம் உள்ள அக்பர் மருத்துவமனை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மருத்துவனைக்கு செல்லும் நோயாளிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி

கொசுக்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் ஏராளமான கொசுக்கள் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், உடல்களில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் தினமும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மீனாட்சி சுந்தரம், வலையப்பட்டி.

சேறும், சகதியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், பழைய விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலையில் சேறும், சகதியுமாக இருப்பதால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சிமெண்டு சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலகுரு, பழைய விராலிப்பட்டி. 

Tags:    

மேலும் செய்திகள்