தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-21 18:44 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர் 98650 66213

புதுக்கோட்டை மாவட்டம், குமாரமங்கலம் ஊராட்சி ஜோதி ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் கடித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், குமாரமங்கலம்.

எரியாத உயர்மின் கோபுர விளக்குகள்

புதுக்கோட்டை மாவட்டம். ஆதனக்கோட்டை மடத்துக்கடை வீதியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளது. இங்குள்ள உயர்மின் கோபுரத்தின் விளக்குகள் கடந்த ஓராண்டிற்கு மேல் எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இரவு நேரங்களில் இருட்டாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வெளியூர்களுக்கு வேலை நிமித்தமாக சென்று விட்டு இரவு நேரங்களில் வீடு திரும்பும் பெண்கள் மிகுந்த அச்சத்துடனையே இருட்டிற்குள் மடத்துக்கடையை கடந்து செல்கின்றனர். எனவே எரியாத உயர்மின் கோபுர விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆதனக்கோட்டை.

தரைக்கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சந்தைபேட்டை, உழவர் பகுதிகளில் சாலையோரங்களில் ஏராளமான தரைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மற்று நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரங்களில் உள்ள தரைக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆலங்குடி.

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், நத்தம்பண்ணை ஊராட்சிக்குட்பட்ட மேற்கு பாலன் நகர் பாலமுத்து மாரியம்மன் கோவில் நாடக மேடையையொட்டி மின்மாற்றி உள்ளது. இதனால் திருவிழா காலங்களில் வண்ண விளக்குகள் அலங்கரிப்பதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த நாடக மேடையில் நடத்துவதற்கும், மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மின்மாற்றியை இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தீபாபிரபு, நத்தம்பண்ணை.

அரசு பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜாளிப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 250-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தொடர்ந்து படிக்க 11 மற்றும் 12-ம் வகுப்புகள் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் மேற்படிப்பிற்கு மணப்பாறை சென்று வர வேண்டி உள்ளது. எனவே அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தர உயர்த்தி 11 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ராஜாளிப்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்