தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-06-20 19:22 GMT

உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையின் மைய தடுப்புகட்டையையொட்டி உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்குள்ள சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றதால் அங்கிருந்த மின்விளக்கு கம்பம் அகற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் அங்கு தொடர் விபத்துக்கள் நடைபெறுகிறது. ஆகவே 3 புறம் சாலைகள் சந்திக்கக்கூடிய அங்கு மீண்டும் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை வேண்டும்.

மணிகண்டன், கே.கே.நகர், திருச்சி.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்கர் மதுராபுரி பகுதியில் மண் சாலையை தார்சாலையாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது சாலையில் மண்கள் போடப்பட்டு தற்போது 3 மாதங்களாகியும் பணிகள் தொடக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது மழை காலம் என்பதால் சாைலயின் மண்கள் அனைத்தும் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தேவாங்கர் மதுராபுரி, திருச்சி.

குவிந்து கிடக்கும் கு'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ப்பைகள்

திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்..எஸ், சாலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகாரமாகவும் குப்பைகள் அனைத்தும் அப்பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் குப்ைபகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்ைபகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

வசந்தி, ஸ்ரீரங்கம், திருச்சி. 

Tags:    

மேலும் செய்திகள்