தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-06-18 18:59 GMT

ஆபத்தான பள்ளி கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் தலைநகரில் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அதன் அருகில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இதற்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். ஆகவே ஆபத்தான நிலையில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தை அகற்றிட பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகமும், கல்வித்துறையும் அலட்சிய போக்கை கைவிட்டு விபரீத விளைவுகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த பள்ளி கட்டிடத்தை அகற்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம், புதுக்கோட்டை.

ஆம்புலன்ஸ் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 38 இடங்களில் "108 ஆம்புலன்ஸ்" இயக்கப்படுகிறது. அதில் மறமடக்கி, வாராப்பூர், மழையூர், புனல்குளம், ராஜநாயகம்பட்டி, பரம்பூர், காரையூர், வல்லத்திரகோட்டை, ஆதனங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 மாதத்திற்கு மேலாக இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதிகளில் அவசர நோயாளிகள் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மறமடக்கி, புதுக்கோட்டை. 

Tags:    

மேலும் செய்திகள்