தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி தேவை
புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. சில குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. குடிநீர் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரெயில் பயணிகள், புதுக்கோட்டை.