தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள கடைவீதி, விருத்தாச்சலம் ரோடு, சிதம்பரம் ரோடு, திருச்சி ரோடு, கும்பகோணம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் நடுவே கூட்டம், கூட்டமாக கால்நடைகள் சுற்றித்திரிகிறது. மேலும் மாடுகள் ஒன்றொன்று, ஒன்று சண்டை போட்டு கொண்டு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது வந்து விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.
குரங்குகள் தொல்லை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா குவாகம் கிராமத்தில் கீழ குவாகம் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திறிகின்றன. இவை அப்பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள காய்கறிகள், மளிகை பொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவற்றை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் நிலத்தில் உள்ள விளைச்சலை சேத படுத்துகின்றன. இதனால் உணவு பயிரிகள் பயிரிட முடியவில்லை. எனவே இது குறித்து சம்ப்பந்தபட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், குவாகம், அரியலூர்.
மலைப்பாதையில் பள்ளம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி மலை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் பாதை மற்றும் இரு சக்கர இலகுரக வாகனங்கள் செல்வதற்கு 400 மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலையில் ஒரு இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் சாலையின் ஒரு புறம் பாதுகாப்பு சுவர்கள் அமைக்கப்படாமல் இருக்கிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள், செட்டிக்குளம், பெரம்பலூர்