நாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து விபத்து - இருவர் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சேநேயர் கோவில் அருகே உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சேநேயர் கோவில் அருகே உள்ள வீட்டில் தனலட்சுமி என்பவரும் இவரது வீட்டிற்கு அருகே ருக்குமணி பார்த்தசாரதி என்ற தம்பதியினரும் வசித்து வந்தனர்.இதில் தனலட்சுமி கியாஸ் தீர்ந்துவிட்டதால் புது சிலிண்டர் வாங்கியுள்ளார்.பின்னர் அதனை மாற்றுவதற்கு சிலிண்டர் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவரை அழைத்துள்ளார்.
அதன் படி சிலிண்டரை அருண்குமார் மாற்றும் போது கியாஸ் வெளியாகி உள்ளது. அப்போது அதனை அடைக்க முயலும் போது திடீரென அது வெடித்து சிதறியது. இதில் தீ யானது அருகில் உள்ள தம்பதியினர் வீட்டிற்கும் பரவியது.
இதில் வீட்டினுள் இருந்த தனலட்சுமி, பார்த்தசாரதி, ருக்குமணி, அருண்குமார் ஆகியோர் காயமடைந்தனர். இதில் தனலட்சுமி மற்றும் பார்த்தசாரதி படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்து மூலம் தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. கியாஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் மற்றும் ருக்குமணி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
முதற்கட்ட விசாரணையில் சிலிண்டர் மாற்றும் போது கியாஸ் வெளியானதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.