"மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும்" வானிலை மையம் தகவல்
நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும்.
நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, வேலூர்,தி.மலை.கள்ளக்குறிச்சி,கடலூர் தருமபுரி, சேலம், நாமக்கல்,திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.