சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி தான் - மு.க.ஸ்டாலின்
சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
உலக சைக்கிள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சைக்கிள் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
" சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு உடல்நலம் பேணவும் உதவுகிறது! இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வு! சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே!" என்று தெரிவித்து உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளிங் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.