அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி கரூரில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
சைக்கிள் போட்டி
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சைக்கிள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சைக்கிள் போட்டிகளில் ஆண்கள் -374 பேரும், பெண்கள் 188 பேரும் என மொத்தம் 562 பேர் கலந்து கொண்டனர். 13 வயதிற்குபட்ட மாணவிகளுக்கு (10 கி.மீ. தூரம்) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி கரூர் - திண்டுக்கல் ரோடு, கலெக்டர் அலுவலகம், மணவாடி பாரத் பெட்ரோல் பங்கு வரை சென்று மீண்டும் ஆஸ்ரமம் பள்ளி, கலெக்டர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதான ஆர்ச் வழியாக வந்து விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
நிறைவு
13 வயதிற்குபட்ட மாணவர்கள் மற்றும் 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு- (15 கி.மீ. தூரம்) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி கரூர் - திண்டுக்கல் ரோடு, கலெக்டர் அலுவலகம், மணவாடி ஊராட்சி வரை சென்று மீண்டும் ஆஸ்ரமம் பள்ளி, வெங்கக்கல்பட்டி பாலம், கலெக்டர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதான ஆர்ச் வழியாக வந்து விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு- (20 கி.மீ. தூரம்) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி கரூர் - திண்டுக்கல் ரோடு, கலெக்டர் அலுவலகம், வெள்ளியணை பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் வெங்கக்கல்பட்டி பாலம், கலெக்டர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம் ஆர்ச் வழியாக வந்து விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
பரிசுகள்
இந்த சைக்கிள் போட்டியானது மாணவர்கள், மாணவிகள் ஆகியோருக்கு 3 பிரிவுகளில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.