தகராறை தட்டிக்கேட்ட நகராட்சி கவுன்சிலருக்கு கத்தி வெட்டு

திருப்பத்தூரில் தகராறை தட்டிக்கேட்ட நகராட்சி கவுன்சிலருக்கு கத்தி வெட்டு விழுந்தது.

Update: 2022-06-14 12:53 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் சிவராஜ் பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெற்றிகொண்டான். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அவர் நகராட்சி 36-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது வீட்டின் அருகே சிவராஜ் பேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் முரளி (35) மற்றும் அவருடன் 3 நபர்கள் சேர்ந்து பொம்மிகுப்பம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகு என்பவரை தாக்கி உள்ளனர். இதனை கவுன்சிலர் வெற்றிகொண்டான் தட்டிக்கேட்டுள்ளார். உடனே முரளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவருடைய தலையில் வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர். நகராட்சி கவுன்சிலர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். உடனே கைது செயவதாக போலீசார் கூறி சமாதானம் செய்தனர். மேலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்