மருத்துவ குணம் கொண்ட குடம்புளி பயிரிடுங்கள்

வீட்டுத்தோட்டங்களில் மருத்துவ குணம் கொண்ட குடம்புளி பயிரிடுங்கள் என பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜெய ஜாஸ்மின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-23 18:36 GMT

குலசேகரம்:

வீட்டுத்தோட்டங்களில் மருத்துவ குணம் கொண்ட குடம்புளி பயிரிடுங்கள் என பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜெய ஜாஸ்மின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறியிருப்பதாவது:-

3 ஆண்டுகளில் மகசூல்

பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு பி.பி.ஐ. கு1 என்ற குடம்புளி ரகம் வெளியிடப்பட்டது. இந்த பயிரானது கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய உகந்தது. குடம்புளி நடவு செய்த 3 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும். ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 119.94 கிலோ வரை காய்கள் கிடைக்கும்.

முதிர்ந்த பழங்களின் சாற்றில் அமில தன்மை கொண்ட ஹைட்ராசிக் சிட்ரிக் அமிலம் (28.67 சதவீதம்) அதிக அளவில் காணப்படும்.

மருத்துவ குணம்

இந்திய மருத்துவ முறையில் உடல் எடையை குறைப்பதற்காகவும், பலநோய்களை குணமாக்குவதற்கும் இந்த புளி பயன்படுத்தப்படுகிறது.

இந்த பழத்தின் சாறு தென்னிந்திய சமையல்களில் புளிக்கு மாற்றாகவும், உணவு கெடாமல் பாதுகாக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்கும் தன்மை கொண்டதால் பலவெளிநாட்டு சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் தாழ்வான மலைப் பகுதிகளில் தென்னைக்கு இடையே ஒரு ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. பொதுமக்கள் வீட்டுத் தோட்டங்களிலும் குடம்புளியை பயிரிட்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்