தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துபிறந்தநாள் விழா

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துபிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-11-16 18:45 GMT

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஐ.என்.டி.யு.சி.

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பெருமாள்சாமி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், வர்த்தக பிரிவு நகரதலைவர் ஏ.ஜே.அருள்வளன், மாநகர செயலாளர் இக்னேஷியஸ், டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் நேரு, எஸ்.சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், ஊடக பிரிவு சுந்தராஜ், அமைப்பு தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நற்பணி மன்றம்

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 159-வது பிறந்தநாளை முன்னிட்டுகுரூஸ்பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்தது. விழாவுக்கு சென்னை பரதர் நல பேரவை தலைவர் சகாயராஜ் பர்னாந்து தலைமை தாங்கினார். மீனவர் மக்கள் கட்சி தலைவர் அலங்காரபரதர், வீராங்கனை இயக்கம் பாத்திமா பாபு, நெய்தல் எழுத்தாளர் வாசகர் இயக்கம் நெய்தல் அண்டோ, கோரண்டல் சமூக நற்பணி மன்றம் ரோமால்ட், பரதர் நலச்சங்க பொதுச் செயலாளர் கனகராஜ், தமிழக மீனவ மக்கள் கட்சி தலைவர் கோல்டன்பரதர், தேர்மாறன் பரதர் நலச்சங்கம் ஜோபாய் கோமஸ், இந்திய மீனவர் சங்கம் ராஜ்பர்னாந்து, பாண்டியபதி இளைஞர் கூட்டமைப்பு வியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக குரூஸ்பர்னாந்து பேத்தி ரெமோலா வாஸ், தங்கச்சிமடம் பரதர் நலச்சங்கம் தலைவர் சாம்சன், கன்னியாகுமரி கடல்புரத்தான் பரதர் பேரவை தலைவர் அழகன் கெய்சர், பழையகாயல் சுற்றுவட்டார பரவர் நலச்சங்க தலைவர் செல்டன், புன்னக்காயல் ஊர்க்கமிட்டி தலைவர் எடிசன், வேம்பார் ஊர்க்கமிட்டி தலைவர் அன்டன் குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்