கல்லணையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
விடுமுறை நாளையொட்டி கல்லணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் ஆற்றில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.;
திருக்காட்டுப்பள்ளி:
விடுமுறை நாளையொட்டி கல்லணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் ஆற்றில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
கூட்டம் அலைமோதியது
தஞ்சை மாவட்டம் கல்லணையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. சுற்றுலா பயணிகள் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்து கல்லணையின் அழகை சுற்றி பார்த்தனர்.
குளித்து மகிழ்ந்தனர்
கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா, கரிகாலன் மணிமண்டபம் ஆகியவற்றில் சிறுவர் சிறுமியர் விளையாடினர். காவிரி ஆற்றில் நேற்று அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் சீறிபாய்ந்து வெளியேறியது.
வழக்கம்போல் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் கல்லணை மதகுகளின் அருகில் சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
போலீசார் பாதுகாப்பு
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கு என அமைக்கப்பட்டு இருந்த குளியல் தொட்டியில் மிக குறைந்த அளவிலான மக்களே குளித்தனர்.
கல்லணையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பாலங்களில் போக்குவரத்து நெரிசலைக் போலீசார் கட்டுப்படுத்தினர்.