உக்கடம் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம்

உக்கடம் மார்க்கெட்டில் மீன் வாங்க கூட்டம் குவிந்தது;

Update: 2023-06-18 19:00 GMT

தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தது. எனவே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வருகின் றனர். இதனால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மீன் பிரியர் கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நேற்று விடுமுறை நாள் என்ப தால் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க கூட்டம் அதிக மாக இருந்தது. உக்கடம் மார்க்கெட் டில் மீன்கள் விலை (கிலோ) வருமாறு:-

வஞ்சிரம் -ரூ.1600, சிறிய வஞ்சிரம்- ரூ.900, ஊளி - ரூ.750, விளைமீன் - ரூ.550, வாவல் ரூ.1300, மத்தி-ரூ.250, பாறை - ரூ.600, கிழங்கா-200, அயிரை-250, சங்கரா-ரூ.300.

மீன் வியாபாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிந்துவிட்டது. ஆனால் கேரளாவில் மீன்பிடி தடைகாலம் தொடங்கி உள்ளது. எனவே மீன் வரத்து இன்னும் அதிகரிக்கவில்லை. மீன் வரத்து அதிகரிக்கும்போது விலை குறையும் என்றனர்.

மேலும் செய்திகள்