நாமக்கல் மாவட்டத்தில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி காலை 10.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கலெக்டர் உமா தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கலெக்டர் உமா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் பிற துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.