ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம்

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் எஸ்.புதூர் வட்டார ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-03-16 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் எஸ்.புதூர் வட்டார ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.ஜாக்டோ ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம், ஜெயப்பிரகாஷ், குமரேசன் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டியன் சிறப்புரையாற்றினார். இதில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், தொகுப்பூதிய நியமனத்தை ரத்து செய்தல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24-ந் தேதி தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கிலோ மீட்டர் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்