ஒவ்வொரு பட்டத்திற்கும் சாகுபடி செய்ய உகந்த பயிர்கள்
அதிக மகசூல் பெற ஒவ்வொரு பட்டத்திற்கும் சாகுபடி செய்ய உகந்த பயிர்வகைகள் குறித்து விதை மற்றும் அங்கங்க சான்று உதவி இயக்குனர் சுப்பா ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.;
அதிக மகசூல் பெற ஒவ்வொரு பட்டத்திற்கும் சாகுபடி செய்ய உகந்த பயிர்வகைகள் குறித்து விதை மற்றும் அங்கங்க சான்று உதவி இயக்குனர் சுப்பா ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மிளகாய்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஜனவரி மாதத்தில் கத்தரி, மிளகாய், பாகற்காய், தக்காளி, பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, கீரைகள், வெங்காயம், அவரை, கொத்தவரங்காய், கரும்பு ஆகியவற்றையும், பிப்ரவரி மாதத்தில் கத்தரி, மிளகாய், பாகற்காய், தக்காளி, வெண்டைக்காய், சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கீரைகள், கோவைக்காய், அவரை, சூரியகாந்தி, கம்பு, நாட்டு சோளம், பருத்தி ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
மார்ச் மாதத்தில் வெண்டைக்காய், பாகற்காய், தக்காளி, கொத்தவரை, பீர்க்கங்காய், கோவைக்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டு சோளம், பருத்தி, கத்தரி ஆகியவற்றையும், ஏப்ரல் மாதத்தில் செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கங்காய், புடலை பாகற்காய், அவரை, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
வெண்டைக்காய்
மே மாதத்தில் செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரை, நாட்டுச்சோளம் ஆகியவற்றையும், ஜூன் மாதத்தில் கத்தரி, தக்காளி, கோவை பூசணி, கீரைகள், வெண்டைக்காய், கொத்தவரை, தென்னை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
ஜூலை மாதம் மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய், எள், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, புடலை, சூரியகாந்தி, உளுந்து, தென்னை, தட்டப்பயிறு, துவரை, மொச்சை, பாசிப்பயிறு ஆகியவற்றையும், ஆகஸ்டு மாதத்தில் முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், வெண்டை, சுரைக்காய், அவரை, மிளகாய், பாசிப்பயிறு, துவரை, மொச்சை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
நாட்டுச்சோளம்
செப்டம்பர் மாதத்தில் செடி முருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரைகள், பீர்க்கங்காய், பூசணி, குடை மிளகாய், எள், பருத்தி ஆகியவற்றையும், அக்டோபர் மாதத்தில் செடி முருங்கை, முள்ளங்கி, கத்தரி, வெங்காயம், கொத்தவரை, கொண்டைக்கடலை, நெல், கொத்தமல்லி, பருத்தி ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
நவம்பர் மாதத்தில் செடி முருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, மிளகாய், கொத்தவரை, சூரியகாந்தி, கொண்டைக்கடலை, கொத்தமல்லி, நெல், நாட்டுச்சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளி ஆகியவற்றையும் டிசம்பர் மாதத்தில் கத்தரி, சுரைக்காய், தக்காளி, பூசணி, முள்ளங்கி, கொண்டைக்கடலை, நெல், நாட்டுச்சோளம், தென்னை, வாழை, மரவள்ளி ஆகியவற்றை பயிரிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.